Printfriendly

திருமுக்கூடலூர் - அருள்மிகு ஸ்ரீ அகத்தீசுவரர் கோவில் (சித்தர் ஸ்ரீ அகத்தியர் கையால் செய்யப்பட்ட மண் சிவலிங்கம்)


  கோவில் தகவல்கள்

   இறைவன் : ஸ்ரீ அகத்தீசுவரர்
   இறைவி      :ஸ்ரீ அஞ்சனாட்சியம்மன்
   இருப்பிடம் : திருமுக்கூடலூர்(கரூர்     
   மாவட்டம் நெரூர் அருகே)    
   மாவட்டம்  : கரூர்  
   பழமை : சுமார் 1500 வருடங்களுக்கு மேல்
   பிற இறை சன்னதிகள் : சித்தர் சமாதி,  ஜேச்டாதேவி,வீரபத்திரர்,காலபைரவர்,மண்னீஸ்வரர்,பிற கோஷ்ட தெய்வங்கள். 

  கோவில் வரலாறு
   
இந்த திருக்கோவில் சுமார் 1500 வருடங்களுக்கு முற்பட்டது.மிக பழமையான ஆலயம்.இதன் அமைவிடம் மூன்று புண்ணிய நதிகள் அதாவது காவேரி,அமராவதி மற்றும் மணிமுத்தாறு ஆகிய மூன்று நதிகள் சேரும் இடத்தில் அமராவதி கரையோரம் அமைந்துள்ளது.இங்குள்ள இறைவன் ஸ்ரீ அகத்தீசுவரர் மண்ணால் செய்யப்பட சிறிய திருமேனி.சித்த புருஷர் ஸ்ரீ அகத்தியர் அவர் தம் கரம் கொண்டு செய்யப்பட்ட சிவ லிங்கம்.இத்துணை காலம் கடந்தும், கோவில் சிதிலம் அடைத்தும் மிக பொழிவுடன் காட்சி தருகின்றார்.இறைவி திருநாமம் ஸ்ரீ அஞ்சனாட்சியம்மன்,தனி சன்னதி கொண்டு அருள் வழங்குகின்றார்.மூலவர் கருவறையின் வெளி மண்டபத்தில் ஸ்ரீ கணபதி,ஸ்ரீ முருகப்பெருமான்,சூர்யபகவான்,காலபைரவர் மற்றும் பிற இறை சிலா ரூபங்கள் உள்ளது.அம்மன் சன்னிதி வெளிப்புறத்தில் சிதிலம் அடைந்த தூண்கள்.அதில் ஒரு தூணில் ஸ்ரீ அகத்தியர் சிவலிங்க பூஜை செய்வது போலும் மற்றும் ஒரு தூணில் ஸ்ரீ அகத்தியர் மற்றும் வாலி இருவரும் சிவலிங்கத்தை பிடித்தபடி ஒரு தூண் சிற்பமும் உள்ளது.அகத்தியர் மற்றும் வாலி இருவருக்கும் ஏற்பட்ட சண்டை காரணமாக இந்த ஸ்தலம் உருவானதாக தகவல்.அதை உறுதி செய்யும் வகையில் இந்த தூண் சிற்ப்பங்கள்.சண்டையில் வாலி தோற்று அமராவதி நதிக்கரையின் மறுக்கரையில் சென்று வழிப்பட்டு வந்த ஸ்தலமாக ஸ்ரீராமசமுத்திரம் ஊரில் உள்ள ஸ்ரீ வாலிஈஸ்வரர் ஆலயம் சொல்லபடுகின்றது.இக்கோவிலில் இருந்து பார்த்தல் அந்தக்கோவிலும் தெரிகின்றது.

பல வருடங்களாக ஆற்று மண் கோவில் முழுவதும் மூடி கிடந்துள்ளது ,60 வருடங்களுக்கு முன்பு கண்டறியப்பட்டுள்ளது.கோவிலை சுற்றி ஸ்ரீ கணபதி,ஸ்ரீ மணிமுக்தீஸ்வரர் சிவ லிங்கம்,ஸ்ரீ வீரபத்திரர் ஆகியோர் தனி சன்னதி உள்ளது.ஜேச்டாதேவி சிலா ரூபம் கோவில் பின்புறம் வெளியில் உள்ளது.கோவில் பிரகாரத்தில் கல்வெட்டுக்கள் உள்ளன.
மூலவர் ஸ்ரீ அகத்தீசுவரர் கருவறை நேர் பின் புறம் கோவில் வெளியே ஜீவ சமாதி ஒன்று உள்ளது.இந்த சமாதி யாருடையது என்ற குறிப்பு சரி வர இல்லை.

கோவில் கோபுரங்கள் அனைத்தும் அந்த காலத்து செங்கற்களால் ஆனவை நல்ல கலைநயம் மிக்கவை,தற்போது முற்றிலும் சிதிலம் அடைத்து உள்ளது.மூலவர் கருவறை கோபுரம் மிக மோசமான நிலையில் எந்த நேரமும் கீழே விழும் நிலையில் உள்ளது.
மொத்த கோவிலும் உடனடியாக திருப்பணி செய்யவேண்டிய சூழலில் உள்ளது.கோவில் சிதிலம் அடைந்தாலும் இறைவன் ஸ்ரீ அகத்தீசுவரர் தரிசனம் அதிக இறை சாமித்தியம் கொண்டது.அதி அற்புத கோவில்,இங்கு சென்று வழிபடும் ஒவ்வொருவரும் இங்கு நல்ல இறை ஆற்றலை உணரலாம்.

முக்கிய குறிப்பு


இந்த கோவில் மிக தொன்மையும்,அற்புத இறைஆற்றல் முழுவதும் நிரம்பிய கோவில்.ஆனால் தற்போது முழுவதும் சிதிலம் அடைந்து கிடப்பது கான்பதற்கு மிகுந்த வேதனையும் வலியையும் தருகின்றது.இறை எண்ணம் கொண்ட இக் கோவிலோடு சம்பந்தபட்ட ஆத்மாக்களின் வருக்கைக்காக உள்ளது.சிவனடியார்கள்,பெரியவர்கள்,நல்ல ஆத்மாக்கள்,ஸ்தல தரிசனம் செய்பவர்கள்,ஊர் மக்கள் மற்றும் இங்கு வழிபாட்டிற்கு வருபவர்கள் யாராக இருந்தாலும் மனம் உவந்து பூஜைக்கும்,பிற வழிபாட்டிற்கும்,கோவில் திருப்பணிக்கும் உங்களால் முடிந்த சேவையை நேரில் சென்று செய்யுங்கள்.

புகைப்படங்கள்

கோவில் நுழைவாயில் - கோபுரம் சிதிலம் அடைத்துள்ளது.


அம்பாள் சன்னிதி கோபுர சிற்பம்
ஸ்ரீ வீரபத்திரர் சன்னிதி
பலிபீடம்
நந்தி பகவான் கோவில் வெளியே
சிதிலம் அடைந்த மண்டபம்
மூலவர் மற்றும் மண்நீஸ்வரர் கோவில் கோபுர பின்புற தோற்றம்
மூலவர் கருவறை நேர் எதிரே பின்புறம் உள்ள சமாதியும்,சமாதி மேலே உள்ள சிவலிங்கமும்
அம்பாள் சன்னிதி கோபுர தோற்றம்
மூலவர் கோபுரம் மற்றும் சண்டேசர் சன்னிதி - ஜேச்டாதேவி சிலா ரூபம் வெளியே
மூலவர் கருவறை சுற்றி உள்ள கல்வெட்டுக்கள்
மூலவர் கோவில் முகப்பு
கோவில் முன்புற தோற்றம்
கோவில் நுழைவாயில் உட்புற தோற்றம் - சிதிலம் அடைந்துள்ளது
அமராவதி நதி - கோவில் அருகில்
கோவில் கோபுரம் - சிதிலம் அடைந்துள்ளது
மூலவர் கருவறை கோபுரம்
ஸ்ரீ கணபதி கோவில் நுழைவாயில் தாண்டியவுடன்.பலிபீடம் மற்றும் நந்தி மண்டபம்.


கோவில் முகவரி மற்றும் தொடர்புக்கு

அருள்மிகு ஸ்ரீ அகத்தீசுவரர் கோவில்
திருமுக்கூடலூர்,
சோமூர் ஊராட்சி,
நெரூர் அருகில்,
கரூர் மாவட்டம்
தமிழ் நாடு.

ராஜா சுப்பிரமண்யம் - அர்ச்சகர்

+91-9786463072

+91-8675225081

அர்ச்சகர் வீடு அருகிலேயே உள்ளது.


தரிசனம் செய்த நாள் : 07/04/2018


Comments