Printfriendly

மணப்பாறை ஸ்ரீ அகத்தீஸ்வரர் ஆலயம் (சுக பிரசவம் - குழந்தை பேரு - மிக ரம்மியமான பழமையான ஆலயம்)


கோவில் தகவல்கள்

இறைவன் : ஸ்ரீ அகத்தீஸ்வரர்
இறைவி      : ஸ்ரீ வடிவுடை நாயகி
இருப்பிடம் : மணப்பாறை (ஆண்டார்கோயில் பஸ் நிறுத்தம் அருகில்)
மாவட்டம்    : திருச்சி
பழமை   : சுமார் 1500 வருடங்களுக்கு மேல்
பிற இறை சன்னிதிகள் : கன்னிமூலை கணபதி,ஸ்ரீ முருகப்பெருமான்,ஸ்ரீ காலபைரவர்,ஸ்ரீ சூர்ய-சந்திரர்,கோஷ்ட தெய்வங்கள்,நவகிரகங்கள் மற்றும் தாயுமான சுக சித்தர்.

கோவில் வரலாறு

மிக அமைதியான, இயற்கை வளம் சூழ்ந்த, மரங்கள் சூழ்ந்த, சிறு குன்றின் மேல் அமைந்துள்ள பழமையான சிவாலயம்.பார்ப்பதற்கு கண்ணைக் கவரும் அமைதியான அற்புதமான ஆலயம்.இந்த புராதனமான மலைக்கோவில் பல்வேறு இறை இரகசியங்களை தன்னுள் கொண்டு விளங்குகின்றது.இங்கு இறைவன் ஸ்ரீ அகத்தீஸ்வரர் சுயம்புவாக உள்ளார்.நல்ல அழகான தோற்றம்.இறைவி ஸ்ரீ வடிவுடை நாயகி பெண் குலத்திற்கு பல்வேறு நல்ல வரங்களை அருளும் தாயாக உள்ளார்.தாய்மைப்பேறு வேண்டுவோரும்,அடைந்தோரும் வாழ்வில் ஒருமுறையாவது கட்டாயம் வழிபடவேண்டிய கோவில்.

இந்த ஆலயத்தின் ஒவ்வொரு இறை கருவறையும்,மண்டபமும்,இறை பிரகாரமும் மிகச் சிறந்த முறையில் கட்டப்பட்டுள்ளது.அதிக இறை சாமித்தியமும்,சிறந்த ஆகம விதிப்படியும் கட்டப்பட்ட ஆலயம்.நாங்கள் இந்த ஆலயத்திற்கு சென்ற நேரம் ஒரு மாலைப் பொழுது,மரங்களின் காற்று, கோவிலின் அமைப்பு மற்றும் அமைதி அத்துணை இன்பம்.கோவில் ரோட்டின் ஓரம் இருந்தாலும் கூட எந்த ஒரு வெளிச் சத்தமும் கோவிலின் உள்ளே கேட்டகவில்லை.கோவிலைச்சுற்றி மிகப்பெரிய மதில் சுவர்கள்.மிக அற்புத தரிசனம்.
இங்கு கன்னிமூலை கணபதி நீண்ட பிரகாரத்தில் உள்ளார்.கோஷ்டத்தில் உள்ள ஸ்ரீ தக்க்ஷணாமூர்த்தி மிக அழகாக உள்ளார்.இவருக்கு எதிரே உள்ள தூனில்தான் ஸ்ரீ தாயுமான சுக சித்தர் உருவம் உள்ளது.இவரை வணங்குவது போல எதிரே உள்ள தூணில் பெண் உருவம்.தாயுமான சுக சித்தர் இந்த ஆலயத்தில் நெடுங்காலும் தவம் இயற்றி வந்துள்ளார்.இவர் இடுசுரை கர்ப்பம் என்ற தவ வலிமை கொண்டவர்.இவர் இந்த தவ வலிமையைக் கொண்டு கர்ப்பம் தாங்க முடியாதவர்கள்,கருச்சிதைவு ஆகுபவர்களது கருவினை தனது வயிற்றுக்கு மாற்றிக்கொண்டு சில நாட்கள் கழித்து மீண்டும் அந்தக் கருவினை உரிய தாயின் கர்ப்பத்திற்குள் குழந்தையாக மாற்றி விடுவார்.இந்த அற்புத தவப்பயனைக் கொண்டு பல்வேறு தாய்மார்களுக்கு நல்அருள் புரிந்துள்ளார்.இந்த உத்தம சித்தபுருஷரை இன்றும் நாம் இந்த கோவிலில் கோஷ்டத்தில் உள்ள ஸ்ரீ தக்க்ஷணாமூர்த்திக்கு எதிரே உள்ள தூணில் தரிசிக்கலாம்.

ஸ்ரீதண சிருஷ்டி ரகசியத்தை ஸ்ரீ அகத்திய பெருமானுக்கு அம்பாள் சொன்ன திருத்தலம் இது.இங்குள்ள அம்பாள் சன்னிதியின் கோபுரத்தில் ஸ்ரீதண சக்ரம் இருப்பதாக ஒரு ஐதீகம்.இங்கு சூர்ய பகவானும் சந்திர பகவானும் தனித்தனி கருவறையில் ஒரே மண்டபத்தில் மிக அருகில் இருவரும் உள்ளனர்.இது ஒரு வித்தியாசமான அமைப்பு.இங்கு முருகப்பெருமான்,பைரவர்,நவகிரகங்கள்,நந்தி,சண்டிகேஸ்வரர் மற்றும் கோஷ்டத்தில் உள்ள ஸ்ரீ மகாவிஷ்ணு தேவர் சிலை ரூபங்கள் மிக தத்ரூபமாக உள்ளது.கோவில் மலையைச் சுற்றிலும் மரங்கள்.கோவில் பிரகாரத்தை சுற்றும்போது அத்துணை ரம்யம், அழகு மற்றும் அமைதி.இதை இங்கு வழிபடும் ஒவ்வொரு வரும் நன்கு உணரலாம்.

 கோவில் புகைப்படங்கள்

கோவில் முகப்பு தோற்றம் - சிறு மலை மீது உள்ள ஆலயம்
1.ஸ்ரீ கணபதி 2.ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தி 3.தாயுமான சுக சித்தர் 4.பெண்கள் சித்தர் ரை வழிபடுதல் 5.ஸ்ரீ விஸ்ணு பகவான் 6.ஸ்ரீ முருகப்பெருமான் 7.ஸ்ரீ சண்டிகேஸ்வரர் 8.ஸ்ரீ காலபைரவர் 9.நவகிரகங்கள் 10.நந்தியம் பெருமான்

கோவிலின் முழுத்தோற்றம் - கோபுரங்கள் - பிரகாரங்கள் - சூர்ய சந்திரர் மண்டபம்

கோவில் முகவரி மற்றும் தொடர்புக்கு

அருள்மிகு ஸ்ரீ வடிவுடைய நாயகி சமேத ஸ்ரீ அகத்தீஸ்வரர் ஆலயம்
ஆண்டார்கோவில் பஸ் நிறுத்தம்,
திருச்சி-மணப்பாறை மார்கத்தில் மணப்பாறையில் உள்ளது,
மணப்பாறை,
திருச்சி மாவட்டம்.

கோவில் நேரம் : காலை 7 - 11 மணி மற்றும் மாலை 5 - 8 மணி.விசேஷ நாட்களில் மாறுபடும்.

முத்துக்கண்ணன் - அர்ச்சகர்

+91 - 9443192643

கோவிலுக்கு செல்லும் முன் அர்ச்சகரை தொடர்புகொண்டு செல்லலாம்.

தரிசனம் செய்த நாள் : 17/05/18

Comments

  1. சிவ சிவ. பகிர்ந்து கொள்கிறேன் அய்யா. நன்றி!

    ReplyDelete

Post a Comment