Printfriendly

ஒழுகமங்கலம் - ஸ்ரீ அகோர வீரபத்ர பைரவர்(ஸ்ரீ திருமேனிஸ்வரர் ஆலயம் - ஸ்ரீதிரிதலை கருமுத்து பைரவர்)

ஒழுகமங்கலம் - ஸ்ரீ அகோர வீரபத்ர பைரவர்

கோவில் பற்றி

சிவகங்கை மாவட்டத்தில் திருப்பத்தூர் பொன்னமராவதி மார்கத்தில் உள்ள ஒழுகமங்கலம் ஸ்ரீதிருமேனிஸ்வரர் ஆலயத்தில் உள்ள ஸ்ரீஅகோர வீரபத்ர பைரவ மூர்த்தி மிகவும் சக்தி வாய்ந்தவர்.பித்ரு தோஷம்,பிரம்மகஸ்தி தோஷம்,பிதுராதி தோஷம்,நமது முன்னோர்களுக்கு செய்ய வேண்டிய கடமைகளை சரிவர செய்யாமல் வரும் தோஷம் அனைத்தும் இங்கு உள்ள ஸ்ரீ அகோர வீரபத்ர பைரவ மூர்த்தியை வழிபடுதல் மூலம் நல்ல மாற்றங்களையும் பலன்களையும் பெறலாம்.இங்கு உள்ள பைரவ மூர்த்திக்கு அணையா விளக்கு யட்ட்ருவதன் மூலம் நமது தோஷம்களை நிவர்த்தி செய்து கொள்ளலாம்.இது உண்மை இது சத்தியம்.பல்வேறு அற்புத சக்திகளை கொண்ட கோவில் இது.மிகவும் பழமையான கோவில்.

எப்படி செல்வது?

சிவகங்கை மாவட்டத்தில் திருப்பத்தூர் பொன்னமராவதி மார்கத்தில் உள்ள ஒழுகமங்கலம் என்ற ஊர் செல்லவும்.மிக அமைதியான அக்ரகரத்தின் அருகில் உள்ள கோவில்,கோவில் அருகில் குளமும் உள்ளது.

குறிப்பு

இந்த கோவில் தற்பொழுது சரியான பராமரிப்பு இல்லாமல் உள்ளது.
இறை சிலா ரூபங்கள் அனைத்தும் தற்சமையம் கோவிலின் உள்ளே ஒரு மண்டபத்தில் வைக்கப்பட்டு வழிபாடுகள் நடைபெறுகின்றது.
நல்ல உள்ளம் கொண்ட மனிதர்கள் தங்களால் முடிந்த சேவைகளை நேரடியாக இங்கு சென்று செய்யலாம்.

கோவில் நுழைவாயில்
ஸ்ரீதிருமேனிஸ்வரர் விமானம்
இறை சிலா ரூபங்கள் உள்ள மண்டபம்
கோவிலின் வெளிப்புறம் உள்ள இரட்டை கணபதி
கோவில் சுற்றுபுறம்
ஸ்ரீதிருமேனிஸ்வரர் கோவில் கருவறை
ஸ்ரீ அகோர வீரபத்திர பைரவர் கருவறை
இறை சிலா ரூபங்கள் வைக்கபட்டுவுள்ள மண்டபம்
கோவில்  கருவறை சுவர்
சிதலம் அடைந்துள்ள மற்ற கருவறைகள்
சிதலம் அடைந்துள்ள மற்ற கருவறைகள்
கோவில் தூணில் உள்ள சிற்பம்
ஸ்தல விருட்சம்
கோவில் குளம் - வெளிப்புறம்
கோவில் முகப்பு - மிக பழமையான கோவில்
அக்ரஹாராம் - கோவில் வரும் வழி

Comments

Popular Posts